தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/கிளம்புது துாசி கலங்குது நாசி

கிளம்புது துாசி கலங்குது நாசி

கிளம்புது துாசி கலங்குது நாசி


UPDATED : நவ 16, 2026 07:10 PM

ADDED : நவ 16, 2026 07:10 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 16, 2026 07:10 PM ADDED : நவ 16, 2026 07:10 PM


Follow on Google
அ நிறம் | அளவு

வாடிப்பட்டி: ஆண்டிபட்டி, பாலமேடு ரோட்டில் கிரஷர்கள், குவாரிகளிலிருந்து வெளியேறும் துாசியால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.

இங்கு ஆண்டிபட்டி, பாலமேடு ரோட்டில் இருபுறமும் ஏராளமான கிரஷர்கள், குவாரிகள் உள்ளன. இதில் பல கிரஷர்கள் முறையாக துாசி வெளியேறுவதை கட்டுப்படுத்தாததால் இப்பகுதியே புகைமண்டலமாக காட்சியளிக்கிறது. மரம், செடி, கொடிகளில் துாசிப் படலமாக படிந்துள்ளன.

குவாரிகளிலிருந்து ஜல்லி, மணல் ஏற்றி வரும் லாரிகள் தார்ப்பாய் கொண்டு மூடாமல் வருகின்றன. இவை செல்லும் போது துாசி பறந்து புகைமண்டலம் ஆகிறது. அடிக்கடி லாரிகள் செல்வதால் ரோடும் சேதமடைந்து குண்டும், குழியுமாக மாறிவிட்டது. இதனால் டூவீலர்களில் செல்வோர் சிரமமடைகின்றனர்.

மேலும் பூச்சம்பட்டி, கச்சைகட்டி கிராமத்தினர் சுவாச, செரிமான பிரச்னைகளால் அவதியுறுகின்றனர். பலமுறை அதிகாரிகளிடம் தெரிவித்தும் பலனில்லை. மாவட்ட, சுற்றுச்சூழல் அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us