sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

கவிஞர் வார்த்தை வங்கியாக இருக்க வேண்டும் நெல்லை ஜெயந்தா பேச்சு

/

கவிஞர் வார்த்தை வங்கியாக இருக்க வேண்டும் நெல்லை ஜெயந்தா பேச்சு

கவிஞர் வார்த்தை வங்கியாக இருக்க வேண்டும் நெல்லை ஜெயந்தா பேச்சு

கவிஞர் வார்த்தை வங்கியாக இருக்க வேண்டும் நெல்லை ஜெயந்தா பேச்சு


ADDED : ஏப் 20, 2025 04:33 AM

Google News

ADDED : ஏப் 20, 2025 04:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : ''கவிஞர் வார்த்தை வங்கியாக இருக்க வேண்டும்'' என மதுரையில் நடந்த தாமரை பிரதர்ஸ் மீடியா பதிப்பகத்தின் டாக்டர் எஸ்.மீனாட்சி சுந்தரம் எழுதிய 'மனவானத்து மின்னல்கள்,' மற்றும் 'கதைகள் + விதைகள் = கவிதைகள்' கவிதை புத்தகங்கள் வெளியீட்டு விழாவில் தமிழ் வளர்ச்சித்துறை மாநில ஒருங்கிணைப்பு அலுவலர் கவிஞர் நெல்லை ஜெயந்தா பேசினார்.

இந்நிகழ்ச்சிக்கு பாடி சுப்பிரமணிய ஐயர் தலைமை வகித்தார். 'மனவானத்து மின்னல்கள்' புத்தகத்தை அகில இந்திய நரம்பியல் அகாடமி தலைவர் டாக்டர் லட்சுமி நரசிம்மன் வெளியிட, மதுரை மூத்த நரம்பியல் டாக்டர் ஸ்ரீநிவாசன் பெற்றுக் கொண்டார். 'கதைகள் + விதைகள் = கவிதைகள்' புத்தகத்தை கண்ணதாசன் நற்பணி மன்ற தலைவர் சொக்கலிங்கம் வெளியிட, மதுரை வடமலையான் மருத்துவமனை இதயவியல் துறை இயக்குனர் டாக்டர் பி.ஆர்.ஜே.கண்ணன் பெற்றுக் கொண்டார்.

எழுத்தாளர் வரலொட்டி ரெங்கசாமி பேசியதாவது:

இக்கவிதைகளில் வார்த்தை, ஓசை, பொருள் நயம் எது மிதமிஞ்சி நிற்கிறது என பட்டிமன்றம் நடத்தினால் அனைத்துமே சமச்சீராக உள்ளது என தீர்ப்பு வந்திருக்கும். ராமாயண கதை காட்சிகளை கற்பனையாக, அழகாக கவிதையாக்கியிருக்கிறார் மீனாட்சி சுந்தரம். கவிதையின் தரம் சிலிர்க்க வைக்கிறது. கவிதைக்கு அழகு முக்கியம் என்றார்.கவிஞர் நெல்லை ஜெயந்தா பேசியதாவது: டாக்டர் (மீனாட்சி சுந்தரம்) கவிஞராக மறுபிறப்பு எடுத்துள்ளார்.

ஆசிரியர், டாக்டர், பொறியாளர் என பல துறைகளை சேர்ந்தவர்கள் தங்களின் பிள்ளைகளை அதே துறையில் உருவாக்க முடியும். ஆனால் ஒரு கவிஞன் தனது மகனை கவிஞனாக்க முடியாது. ஆதலால்தான் கவிஞர்கள் சிறப்பு பெறுகின்றனர்.

யாரும் எளிதில் சென்றடைய முடியாத இடத்தை சென்றடைகின்றனர். கவிஞர் வாலி வார்த்தை வங்கியாக இருந்தார். அதுபோல் ஒரு கவிஞர் வார்த்தை வங்கியாக இருக்க வேண்டும். மீனாட்சி சுந்தரம் முழு நேர கவிஞர்களை மிஞ்சுகிற, வார்த்தை சித்தர் என சொல்லும் அளவிற்கு கவிதைகள் எழுதியுள்ளார்.

கவிஞர்கள் சுரதா, கண்ணதாசன் கவிதைகளை வாசிக்கும்போது ஏற்படும் அதே உணர்வை மீனாட்சி சுந்தரத்தின் கவிதைகளை வாசிக்கும்போது உணர்கிறேன். அவர் தமிழகத்தின் முக்கிய கவிஞராக வருவார் என்றார்.

சொக்கலிங்கம் பேசுகையில், ''எளிய நடையில் மீனாட்சி சுந்தரத்தின் கவிதை உள்ளது. தனது துறை சார்ந்த தவறுகள், நிலவும் செய்திகளை பதிவு செய்ய முடியும் என்பதை தெளிவுபடுத்தியுள்ளார். எழுத்து, கவிதை வாசிப்பவர்களுக்கு துணையாக இருக்க வேண்டும்,'' என்றார்.

சேலம் சிம்ஸ் செல்லம் மருத்துவமனை இயக்குனர் பாலமுருகன் நமசிவாயம், மதுரைக் கல்லுாரி பேராசிரியை (ஓய்வு) கமலம் சங்கர் பங்கேற்றனர். சுந்தரம் பாஸனர்ஸ் தொழிற்சாலை மருத்துவ அதிகாரி குரு பிரகாஷ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். டாக்டர் மீனாட்சி சுந்தரம் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us