ADDED : ஜூலை 17, 2025 12:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உசிலம்பட்டி: உசிலம்பட்டி அருகே எர்ரம்பட்டிக்கு பஸ் வசதி இல்லாததால் பக்கத்து கிராமங்களுக்கு சென்று மக்கள் பஸ்சில் சென்றனர்.
இதே போல் அருகில் உள்ள சுளிஒச்சான்பட்டி, லிங்கப்பநாயக்கனுாரிலும் பள்ளி நேரத்தில் பஸ் விட வேண்டும் என மாணவர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
தி.மு.க., வடக்கு ஒன்றியச் செயலாளர் அஜித்பாண்டி முயற்சியால் எர்ரம்பட்டி, சுளிஒச்சான்பட்டி, லிங்கப்பநாயக்கனுார்,திம்மநத்தம் வழியாக உசிலம்பட்டிக்கு புதிய வழித்தடத்தில் தேனி எம்.பி., தங்கதமிழ்செல்வன் தலைமையில் பஸ் போக்குவரத்து துவக்கப்பட்டது. நகர் செயலாளர் தங்கப்பாண்டியன் உள்ளிட்ட தி.மு.க., வினர் பங்கேற்றனர்.