ADDED : ஜூலை 18, 2025 04:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை சூர்யா நகரை சேர்ந்த அர்ஜூனன் 55, திலகர்திடல் பகுதியில் ஆட்டோமொபைல் கடை வைத்துள்ளார். மூன்று மாதங்களுக்கு முன் கார் வாங்கியுள்ளார்.
நேற்று மதியம் ஆட்டுமந்தை பகுதியில் இருந்த வாகனப் பார்க்கிங்கில் காரை நிறுத்தியுள்ளார். இரவு 9:00 மணிக்கு வீட்டுக்கு செல்ல காரை ஸ்டார்ட் செய்த போது திடீரென தீப்பிடித்தது. அர்ஜூனன் காரில் இருந்து இறங்கி தப்பினார். பின்னர் தீ அணைக்கப்பட்டது. திலகர்திடல் போலீசார் விசாரிக்கின்றனர்.