ADDED : ஜன 19, 2026 05:17 AM
அ நிறம் | அளவு
சோழவந்தான்: சோழவந்தான் அருகே திருவேடகத்தில் தை அமாவாசை வழிபாடு நடந்தது.
இங்கு வைகை ஆற்றங்கரையில் ஆண்டுதோறும் ஆடி, புரட்டாசி, தை அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபாடு நடக்கும்.
இந்தாண்டும் உத்ராயண காலத்தில் வரும் தை அமாவாசையை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி வேத மந்திரங்கள் முழங்க, முன்னோர்களுக்கு தண்ணீருடன் எள் விட்டு தர்ப்பணம் செய்தும், பசுக்களுக்கு அகத்திக்கீரை கொடுத்தும், ஏடகநாதர் கோயிலில் மோட்ச தீபம் ஏற்றியும் வழிபட்டனர். கோபாலகிருஷ்ணன் ஐயர், ஸ்ரீ வர்ஷன் தலைமையில் ஏராளமான புரோகிதர்கள் பூஜைகள் செய்தனர்.
