/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
புதிய ரோடுகள், பராமரிப்பு பணி ரூ.16 கோடி நிதி ஒதுக்கீடு * 'குண்டும் குழியும்' இனி சரியாகும்

ADDED : செப் 25, 2024 03:49 AM
மதுரை : மதுரை மாநகராட்சி பகுதியில் புதிய ரோடுகள் அமைக்கவும், பழைய ரோடுகளை பராமரிக்கவும் மத்திய, மாநில அரசுகள் சார்பில் ரூ. 16 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் நகரில் குண்டும் குழியுமாக காட்சியளிக்கும் பல ரோடுகள் சரிசெய்யப்படும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
நகரில் ஒரே நேரத்தில் பெரியாறு கூட்டுக்குடிநீர் திட்டப் பணிகளுக்கு குழாய் பதிப்பது, பாதாளச் சாக்கடை, மேம்பாலப் பணிகள், புதிய ரோடுகள் என பணிகள் நடப்பதால் மாநகராட்சி பகுதியில் வாகனங்கள் செல்வது பெரும் சவாலாகியுள்ளது.
மாநகராட்சி ரோடுகளை சீரமைக்க வலியுறுத்தி எம்.பி., வெங்கடேசன் மாநகராட்சி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியது அரசியல் ரீதியான சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் மாநில அரசு நிதிக்குழு மானியமாக ரூ.7.50 கோடியும், மத்திய அரசின் தேசிய துாய்மை காற்று திட்டம் சார்பில் ரூ.8.50 கோடி மானியமும் மாநகராட்சிக்கு அளிக்கப்பட்டுள்ளது.
மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது: இந்நிதி மூலம் மாநகராட்சி பகுதியில் விரிவாக்கம் செய்யப்பட்ட வார்டுகளில் புதிய ரோடுகள் அமைக்கப்பட்டு வருகின்றன. நகர் வார்டுகளில் பல்வேறு ரோடுகளை சீரமைக்கவும் இந்நிதி பயன்படுத்தப்பட்டு வருகிறது. மழைக் காலத்திற்குள் அனைத்து ரோடு பணிகளும் முடிக்கப்படும். இதுதவிர மாநில அரசிடம் சிறப்பு நிதியும் கேட்கப்பட்டுள்ளது. இதன்மூலம் மேலும் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.