தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/சிரித்தபடியே சிறை சென்ற நிஷாந்த்

சிரித்தபடியே சிறை சென்ற நிஷாந்த்

சிரித்தபடியே சிறை சென்ற நிஷாந்த்


ADDED : நவ 20, 2026 07:28 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 20, 2026 07:28 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: மதுரை தனிஷ்க் நகைக்கடை கொள்ளை வழக்கில் கைதான நிஷாந்த் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அவரை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி மதுரை நீதித்துறை நடுவர் விரைவு நீதிமன்றம்-1 ல் போலீஸ் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. நீதிபதி ராஜபிரபு முன்னிலையில் நிஷாந்தை நேற்று (நவ.,19) போலீசார் ஆஜர்படுத்தினர்.நீதிபதி ஒருநாள் மட்டும் காவலில் விசாரிக்க அனுமதித்தார். விசாரணை முடிந்து மீண்டும் இன்று (நவ.,20) அதே நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

நீதிபதி ராஜபிரபு: விசாரணையின்போது போலீசார் துன்புறுத்தினார்களா, வேறு எதுவும் கூற விரும்புகின்றீர்களா.நிஷாந்த்: இல்லை.

இவ்வாறு வாதம் நடந்தது.

‛நிஷாந்தை டிச.4 வரை நீதிமன்ற காவலில் வைக்க வேண்டும்’என நீதிபதி உத்தரவிட்டார். நிஷாந்த் சிரித்தபடியே போலீஸ் வாகனத்தில் சிறைக்கு சென்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us