/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மோட்டார் இல்லை... தொட்டி இல்லை...
/
மோட்டார் இல்லை... தொட்டி இல்லை...
ADDED : நவ 21, 2025 03:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார்: கச்சிராயன்பட்டி ஊராட்சி அலுவலகம் எதிரே 10 ஆண்டுகளுக்கு முன்பு போர்வெல் அமைக்கப்பட்டு குடிநீர் விநியோகிக்கப்பட்டது. ஓராண்டிற்கு முன்பு மோட்டார் பழுதானதாக கூறி ஊராட்சி நிர்வாகம் கழற்றி சென்றதோடு சரி, இதுவரை சரி செய்யவில்லை.
அப்பகுதியினர் கூறியதாவது: இதுகுறித்து கிராமசபை கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றியும் கண்டு கொள்ளவில்லை. கண்மாய் உள்ளிட்ட பல பகுதிகளில் தண்ணீரை தேடி அலைவதால் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு மீண்டும் தொட்டி அமைத்து குடிநீர் விநியோகிக்க வேண்டும் என்றனர்.

