/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ஒதுங்க இடமில்லை: விடைத்தாள் திருத்தும் பேராசிரியர்கள் கதறல்:பல்கலையில் அடிப்படை வசதியில்லை என சர்ச்சை

ADDED : பிப் 12, 2024 05:14 AM

மதுரை: மதுரை காமராஜ் பல்கலையில் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டுள்ள பேராசிரியர்களுக்கு கழிப்பறை உள்ளிட்ட வசதிகள் இல்லை என சர்ச்சை எழுந்துள்ளது.
இப்பல்கலைக்கு உட்பட்டு 90க்கும் மேற்பட்ட கல்லுாரிகளில் 2023 நவம்பரில் நடந்த பருவத் தேர்வுகளின் விடைத்தாள் திருத்தும் பணிகள் பல்கலை வளாகத்தில் நடக்கின்றன. மு.வ., அரங்கில் நடக்கும் முகாமில் பி.காம்., உள்ளிட்ட விடைத்தாள்களை 100க்கும் மேற்பட்ட உதவி பேராசிரியர்கள் திருத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதில் 40 சதவீதம் பேர் பெண்கள். காலை 10:00 முதல் மாலை 5:00 மணி வரை நடக்கும் இப்பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு குடிநீர், கழிப்பறை வசதிகள் என அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாததால் கடும் அவஸ்தையில் தவிக்கின்றனர்.
அவர்கள் கூறியதாவது: நாள் ஒன்றுக்கு 54 விடைத்தாள்களைத் திருத்த வேண்டும். பல கிலோ மீட்டர் பயணம் செய்து பல்கலைக்கு வருகிறோம். ஆனால் உரிய வசதி இல்லை. குறிப்பாக இங்குள்ள கழிப்பறைகள் சேதமடைந்து உள்ளே செல்ல முடியாத நிலையில் உள்ளது. வெளியே உள்ள கழிப்பறைகள் தண்ணீரின்றி துர்நாற்றம் வீசிய நிலையில் உள்ளது. பெண் பேராசிரியைகளின் பாடு திண்டாட்டமாக உள்ளது. பல்கலை அதிகாரிகளிடம் தெரிவித்தால் உரிய பதில் இல்லை.
கல்வியாளர்கள் நிறைந்த பல்கலையே இப்படி இருந்தால் எப்படி. துணைவேந்தர் குமார் இப்பிரச்னை குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணிக்கும் முடிவில் உள்ளோம், என்றனர்.