ADDED : அக் 24, 2025 02:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பேரையூர்: சாப்டூர் வடகரைப்பட்டியில் பஸ் ஸ்டாப்பில் நிழற்குடை இல்லாமல் பயணிகள் அவஸ்தைப் படுகின்றனர்.
இந்த ஸ்டாப்பில் வடகரைப்பட்டி, வண்டாரி அணைக்கரைப்பட்டி, மெய்யனுாத்தும்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மாணவ மாணவிகள், முதியோர் பஸ் ஏற வெயிலிலும் மழையிலும் காத்து இருக்கின்றனர். நிழற்குடை இல்லாமல் சிரமப்படுகின்றனர்.
அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

