
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார்: சூரக்குண்டில் இளைஞர்கள் சார்பில் வடமாடு மஞ்சுவிரட்டு நடந்தது.
மதுரை, திண்டுக்கல், சிவகங்கை பகுதிகளில் இருந்து காளைகள் கலந்து கொண்டன. காளைகளை அடக்கியதில் 7க்கும் மேற்பட்டோருக்கு காயம் ஏற்பட்டது. காளைகளின் உரிமையாளர்கள், காளையர்களுக்கு பீரோ, அண்டா, ரொக்க பரிசுகள் வழங்கப்பட்டன.
பெரிய, சின்ன சூரக்குண்டு, புதுசுக்காம்பட்டி வட்டார கிராமங்களை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பார்வையாளர்களாக கலந்து கொண்டனர்.

