/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
வாடிப்பட்டி பகுதி நெல் கொள்முதல் மையங்களில் வட மாநில தொழிலாளர்கள்
/
வாடிப்பட்டி பகுதி நெல் கொள்முதல் மையங்களில் வட மாநில தொழிலாளர்கள்
வாடிப்பட்டி பகுதி நெல் கொள்முதல் மையங்களில் வட மாநில தொழிலாளர்கள்
வாடிப்பட்டி பகுதி நெல் கொள்முதல் மையங்களில் வட மாநில தொழிலாளர்கள்
ADDED : ஆக 14, 2025 03:01 AM
வாடிப்பட்டி: வாடிப்பட்டி பகுதி நெல் கொள்முதல் மையங்களில் ஆள் பற்றாக்குறையால் வட மாநில தொழிலாளர்கள் வேலையில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழகத்தில் கட்டுமானம், தொழிற்சாலை, மால், ஓட்டல்களில் கால் பதித்த வட மாநில தொழிலாளர்கள் நெல் கொள்முதல் மையங்களிலும் தங்கள் பணிகளை தொடர்கின்றனர். தஞ்சை, திருப்பூர் பகுதிகளில் நற்று நடவு, களை எடுப்பது, உரமிடுவது போன்ற பணிகளையும் செய்து வருகின்றனர். 100 நாள் வேலை திட்டத்தால் விவசாய பணிகளுக்கு கூலி ஆட்கள் கிடைப்பதில்லை.
மையங்களில் விவசாயிகள் குவித்து வைத்துள்ள நெல்லை அள்ளி இயந்திரம் மூலம் துாற்றி மூடை கட்டும் பணிகளுக்கு உரிய நேரத்தில் ஆட்கள் கிடைக்காததால் மழை நேரங்களில் சாலையோரங்களில் கொட்டி வைத்துள்ள நெல்லை பாதுகாக்க விவசாயிகள் சிரமப்படுகின்றனர். இந்நிலையில் தனிச்சியம் வடுகபட்டி பகுதியில் பீகார் உள்ளிட்ட வட மாநில தொழிலாளர்கள் 2ம் ஆண்டாக ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.