/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
சேதுபதி மண்டபம் உட்பட ஆக்கிரமிப்புகளை அகற்ற நோட்டீஸ்! ரோடு விரிவாக்க பணிக்காக நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை
/
சேதுபதி மண்டபம் உட்பட ஆக்கிரமிப்புகளை அகற்ற நோட்டீஸ்! ரோடு விரிவாக்க பணிக்காக நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை
சேதுபதி மண்டபம் உட்பட ஆக்கிரமிப்புகளை அகற்ற நோட்டீஸ்! ரோடு விரிவாக்க பணிக்காக நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை
சேதுபதி மண்டபம் உட்பட ஆக்கிரமிப்புகளை அகற்ற நோட்டீஸ்! ரோடு விரிவாக்க பணிக்காக நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை
ADDED : ஏப் 30, 2024 12:26 AM
கோரிப்பாளையம் சந்திப்பு பகுதியில் போக்குவரத்து நெரிசலை தீர்க்க ரூ.196 கோடியில் புதிய பாலம் கட்டப்பட்டு வருகிறது.
தமுக்கம் முன்பு துவங்கி கோரிப்பாளையம் சந்திப்பை கடந்து வைகையின் தென்பகுதியில் நெல்பேட்டை அருகே முடிவடையும் வகையில் 2 கி.மீ., தொலைவுக்கும்,இடையில் கோரிப்பாளையத்தில் இருந்து செல்லுார் பாலம் ஸ்டேஷன் ரோட்டை நோக்கி ஒரு கிளை பிரியும் வகையில் மொத்தம் 3 கி.மீ., நீளத்திற்கு இப்பாலம் அமைகிறது.
பாலப்பணிகளில் மாற்றம்
இப்பாலம் முதலில் மாநகராட்சி அலுவலகம் முன்பு துவங்குவதாக இருந்தது. பாலம் அவ்வாறுஅமைந்தால் தல்லாகுளம் பகுதியில் கள்ளழகர்எதிர்சேவை, பூப்பல்லக்குபோன்றவை பாதிக்கும்.இங்கு ஏராளமான திருக்கண் மண்டபங்கள் உள்ளன.
அவற்றில் அழகர் எழுந்தருள்வது, பல ஆயிரம் பக்தர்கள் கூடி வழிபாடு செய்வதும் ஆண்டாண்டு காலமாக நடப்பதால் பாலப் பணிகளை மாற்றி அமைக்க வேண்டும் என திருக்கண் மண்டப நிர்வாகிகள் வலியுறுத்தினர்.
இதையடுத்தே தமுக்கம் முன்பிருந்து பாலம் துவங்கும் வகையில் கட்டுமானம் மாற்றி அமைக்கப்பட்டது. திருக்கண் மண்டபங்களுக்கு பாதிப்பின்றி பணிகள் துவங்கும் என்பதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இந்நிலையில் கடந்த மாதம் தல்லாகுளம் திருக்கண் மண்டப பகுதியில் உள்ள சேதுபதி மண்டபம் உட்பட ஆக்கிரமிப்புகளை அகற்றப் போவதாக நெடுஞ்சாலைத் துறை சம்பந்தப்பட்டோருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தல்லாகுளம் முதல் தாமரைத் தொட்டி சந்திப்பு பகுதி வரை ரோடு அகலப்படுத்தும் பணிக்காக ஆக்கிரமிப்புகளை அகற்ற போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்னும் முடிவெடுக்கவில்லை
நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் மோகனகாந்தி கூறியதாவது:
தமுக்கம் அருகே தல்லாகுளம் ரோடு, சந்திப்பு பகுதிகள் குறுகலாக உள்ளதால் மேம்படுத்த வேண்டியுள்ளது. தற்போது ரோடு, பாலம் பணிகள் நடப்பதால் எல்லோருக்கும் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. உடனே ஆக்கிரமிப்பை எடுப்பதுபற்றி இன்னும் முடிவெடுக்கவில்லை. இது ரோடு விரிவாக்கத்திற்காக நிலம் கையகப்படுத்துவது போன்றதுதான். மாவட்ட நிர்வாகத்துடன் கலந்து ஆலோசித்துதான் முடிவெடுக்கப்படும் என்றார்.
பாரம்பரியமிக்க சேதுபதி மண்டபத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நெடுஞ்சாலைத்துறை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என ஹிந்து அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.

