/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
அனைத்து வணிகர் சங்கம் சார்பில் நவ. 29ல் கடையடைப்பு போராட்டம்
/
அனைத்து வணிகர் சங்கம் சார்பில் நவ. 29ல் கடையடைப்பு போராட்டம்
அனைத்து வணிகர் சங்கம் சார்பில் நவ. 29ல் கடையடைப்பு போராட்டம்
அனைத்து வணிகர் சங்கம் சார்பில் நவ. 29ல் கடையடைப்பு போராட்டம்
ADDED : நவ 23, 2024 05:15 AM
மதுரை; ஜி.எஸ்.டி. கவுன்சில் தீர்மானத்தை ரத்து செய்ய கோரி அனைத்து வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மதுரையில் நவ. 29ல் முழுநேர கடையடைப்பு போராட்டம் நடத்தப்பட உள்ளது.
ஒருங்கிணைப்பாளர்கள் ஜெயபிரகாசம், பழனிசாமி, வேல்சங்கர், திருமுருகன், பால்ராஜ் ஆகியோர் கூறியதாவது: மத்திய, மாநில அரசுகள் இணைத்து உருவாக்கிய ஜி.எஸ்.டி. கவுன்சில் தீர்மானத்தின் படி 2024 அக்.10 முதல் வணிக பயன்பாட்டிற்கு உள்ள கட்டடங்களுக்கு கொடுக்கும் வாடகைக்கு 18 சதவீதம் ஜி.எஸ்.டி. வரியானது ஆர்.சி.எம். முறையில் விதித்து அதை கட்ட அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆண்டுக்கு ரூ1.5 கோடி வரை விற்று வரவுள்ள வணிகர்கள், தயாரிப்பாளர்கள், ஓட்டல், வரிவிலக்கு உள்ள பொருட்களை மட்டும் விற்பனை செய்யும் வணிகர்கள் பாதிக்கப்படுவர். இந்த தீர்மானத்தை கவுன்சில் கூட்டத்தில் மாநில அரசுகள் எதிர்க்கவில்லை.
இந்த பாதிப்பை சரிசெய்ய ஜி.எஸ்.டி., கவுன்சில் தீர்மானத்தை ஒத்தி வைத்து முழுமையாக நீக்கவேண்டும். மத்திய, மாநில அரசுகளுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் நவ. 29ல் மதுரையில் உள்ள அனைத்து கடைகளும் முழுநேரம் அடைப்பதென முடிவு செய்யப்பட்டுள்ளது என்றனர்.