ADDED : நவ 04, 2026 08:29 PM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரை கைத்தறி நகர் பகுதியில் ஜெயராஜ் அன்னபாக்கியம் நர்சிங் கல்லுாரியின் நாட்டு நலப்பணித் திட்ட முகாம் நடந்தது.
இந்திய செஞ்சிலுவை சங்க மாநில பயிற்றுனர் ராஜ்குமார் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழை காலத்தில் எதிர்கொள்ளும் பிரச்னைகள் குறித்தும், மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை, மழைக்கால தொற்று நோய்கள் குறித்தும் விளக்கினார். பாதிக்கப்படும் மக்களுக்கான முதலுதவி, மீட்பு நடவடிக்கைகள் குறித்தும் எடுத்துக் கூறினார்.
