நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை வாசகர் வட்டத்தின் நுால் மதிப்புரைக் கூட்டம் அமைப்பாளர் சண்முகவேலு தலைமையில் அல்அமீன் பள்ளியில் நடந்தது. ஒருங்கிணைப்பாளர் ராமமூர்த்தி கடந்தமாத நிகழ்வை எடுத்துக் கூறினார். தொல்காப்பிய மன்ற தலைவர் இருளப்பன் மதிப்புரையாளரை அறிமுகப்படுத்தினார்.
பேராசிரியர் மோகன் எழுதிய 'கனவெல்லாம் கலாம்' நுாலுக்கு முதுநிலை ஆசிரியர் அழகுராஜ் மதிப்புரை வழங்கினார். இதில் பேராசிரியர்கள் மருதப்பன், அனார்கலி, கவிஞர்கள் ரவி, முருகேசன், ஆசிரியை ராமதிலகம், எழுத்தாளர் பரமசிவம் பங்கேற்றனர்.
பல்கலை மாணவர் தேவராஜ் பாண்டியன் நன்றி கூறினார். ஆசிரியர்கள் சதாசிவம், தமிழ்க்குமரன் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

