ADDED : நவ 05, 2024 05:25 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் மருத்துவமனை செவிலியர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க கோரி தமிழ்நாடு எம்.ஆர்.பி. செவிலியர் மேம்பாட்டு சங்கம் சார்பில் மதுரை கலெக்டர் அலுவலகம் முன்பாக கண்டன ஆர்பாட்டம் நடந்தது.
திருச்சியில் பணிமுடிந்து வீடு செல்லும் வழியில் செவிலியர் மீது சமூக விரோதிகள் தாக்குதல் நடத்தினர். இதை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் சங்கத் தலைவர் ராஜி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் தாமரைச்செல்வி, அரசு ஊழியர் சங்க பொதுச்செயலாளர் செல்வம், மாவட்ட தலைவர் நீதிராஜா, செயலாளர் சந்திரபோஸ், தமிழ்நாடு மருத்துவத்துறை கூட்டமைப்பு நிர்வாகி ஆனந்தவள்ளி, சத்துணவு ஊழியர் சங்க மாநில செயலாளர் பாண்டிச்செல்வி, சுகாதார செவிலியர் சங்க மாநில தலைவர் பஞ்சவர்ணம் கலந்து கொண்டனர்.
மாவட்ட பொருளாளர்சகாய டெய்சி நன்றி கூறினார்.