/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கல்லுாரிக்கு மாற்றியதால் நர்சிங் பள்ளிக்கு ஆசிரியர்கள் பற்றாக்குறை
/
கல்லுாரிக்கு மாற்றியதால் நர்சிங் பள்ளிக்கு ஆசிரியர்கள் பற்றாக்குறை
கல்லுாரிக்கு மாற்றியதால் நர்சிங் பள்ளிக்கு ஆசிரியர்கள் பற்றாக்குறை
கல்லுாரிக்கு மாற்றியதால் நர்சிங் பள்ளிக்கு ஆசிரியர்கள் பற்றாக்குறை
ADDED : அக் 26, 2025 06:24 AM
மதுரை: மதுரை அரசு மருத்துவக் கல்லுாரியின் கீழ் செயல்படும் நர்சிங் பள்ளிக்கான பயிற்றுநர்களை (டியூட்டர்) நர்சிங் கல்லுாரிக்கு மாற்றியதால் மாணவர்களுக்கு பாடம் கற்றுத்தர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
நர்சிங் பள்ளியில் டிப்ளமோ பாடத்திட்டத்தின் கீழ் 450 பேர் பயில்கின்றனர். இந்தாண்டு கூடுதலாக 100 பேர் 'அனைத்துப்பணியாளர்களுக்கான வேலை' படிப்பின் கீழ் சேர்க்கப்பட்டனர். நான்கு மாதங்களுக்கு முன் வரை 21 ஆசிரியர்கள் இருந்தனர். உயர்கல்வி படிப்பதற்கும் கவுன்சிலிங் மூலமாக பாதி ஆசிரியர்கள் சென்று விட்டனர். 7 பேரை பி.எஸ்சி., நர்சிங் கல்லுாரிக்கு தற்காலிகமாக அயல்பணிக்கு மாற்றப்பட்டனர். இதனால் முதல்வர், நிர்வாக அதிகாரியைத் தவிர மீதியுள்ள 5 ஆசிரியர்கள் தான் 450 மாணவர்களுக்கு பாடம் நடத்த வேண்டியுள்ளது.
இதற்கிடையே அரசு மருத்துவமனை வார்டு பணியையும் ஆசிரியர்கள் மேற்கொள்வதால் பாடம் கற்றுத்தர முடியாத நிலையில் மாணவர்களின் பெற்றோர்கள், பள்ளி முதல்வரிடம் புகார் தெரிவித்துள்ளனர். மருத்துவக் கல்லுாரி வளாகத்தில் தேர்வு மையம் உள்ளதால் பிற தனியார் பள்ளி மாணவர்கள் இங்கு தான் தேர்வெழுத வருவர். விரைவில் தேர்வுகள் நடக்க உள்ளதால் பிற பள்ளி மாணவர்களை கண்காணிப்பதற்கு ஆசிரியர்கள் செல்ல வேண்டும். அரசு நர்சிங் பள்ளி மாணவர்களை அந்த நேரத்தில் கண்காணிக்க முடியாது.
நர்சிங் கல்லுாரிக்கு ஏற்கனவே முதுநிலை நர்ஸ்கள் இருப்பதால் நர்சிங் பள்ளிக்கு தான் ஆசிரியர்கள் தேவைப்படுகின்றனர். எனவே அயல்பணியில் உள்ள ஆசிரியர்களை மீண்டும் நர்சிங் பள்ளிக்கு மாற்ற மருத்துவ கல்வி இணை இயக்குநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

