ADDED : பிப் 02, 2024 12:23 AM
வாடிப்பட்டி : வாடிப்பட்டி வட்டாரத்தில் வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு அறுவடைக்கு பின் தொழில்நுட்பங்கள் குறித்த உள் மாநில அளவிலான கண்டுணர்வு பயணம் நடந்தது.
வாடிப்பட்டி, திருப்பரங்குன்றம், திருமங்கலம், கள்ளிக்குடி பகுதிகளில் இருந்து 50 விவசாயிகள் தேர்வு செய்யப்பட்டனர். அருப்புக்கோட்டை வேளாண்மை அறிவியல் நிலைய பண்ணை மேலாளர் ஜீவா சிறுதானியங்கள் சாகுபடி முதல் அறுவடை வரையிலான தொழில்நுட்பங்கள் குறித்தும், இணை பேராசிரியர் நல்லகருப்பன் மதிப்பு கூட்டுதல் மற்றும் அதன் பயன்பாடுகள் குறித்தும், விருதுநகரில் உள்ள மோதி சிறுதானியங்கள் மதிப்பு கூட்டுதல் நிறுவனத்தில் சிவக்குமார் விற்பனை செய்வதன் மூலம் கிடைக்கும் கூடுதல் வருவாய் குறித்து விளக்கினர்.
கண்டுணர்வு பயண ஏற்பாடுகளை வட்டார தொழில்நுட்ப மேலாளர் பிரியா, உதவி மேலாளர் பூமிநாதன், அருணாதேவி செய்திருந்தனர்.

