திருப்பரங்குன்றம் : விருதுநகர் லோக்சபா தொகுதி திருப்பரங்குன்றத்தில் பா.ஜ., தேர்தல் அலுவலகம் திறப்பு விழா நடந்தது.
மாவட்ட தலைவர் சசிகுமார் தலைமை வகித்தார். பார்வையாளர் ராஜரத்தினம் முன்னிலை வகித்தார். தொகுதி பொறுப்பாளர் ராமதாஸ் வரவேற்றார். மதுரை பெருங்கோட்ட பொறுப்பாளர் கதலி நரசிங்க பெருமாள் அலுவலகத்தை திறந்தார்.
மாநில பொதுச் செயலாளர் ராம ஸ்ரீனிவாசன் தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனைகள் வழங்கினார். ஓ.பி.சி., அணி மாவட்ட தலைவர் வேல்முருகன், பொதுச் செயலாளர் சிவலிங்கம், செயலாளர்கள் வாசுதேவன், இளையராஜா, கோபாலகிருஷ்ணன், இளைஞரணி மாநில செயற்குழு உறுப்பினர் வெற்றி வேல்முருகன், விருதுநகர் லோக்சபா தொகுதி அமைப்பாளர் வெற்றிவேல், இணை அமைப்பாளர் கஜேந்திரன், திருமங்கலம் சட்டசபைத் தொகுதி பொறுப்பாளர் சக்திவேலு, மேற்கு மாவட்ட முன்னாள் ராணுவத்தினர் பிரிவு துணைத் தலைவர் பழனிசாமி பங்கேற்றனர். செயலாளர் ராக்கப்பன் நன்றி கூறினார்.

