/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
சாக்கின் எடையை கூடுதலாக கணக்கிட்டு விவசாயிகளிடம் நெல்லை கூடுதலாக வாங்கும் அதிகாரிகள்

ADDED : மார் 28, 2024 06:30 AM

மதுரை,: மதுரையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தால் நடத்தப்படும் நெல் கொள்முதல் மையத்தில் 200 கிராம் சாக்கின் எடையை இரண்டு கிலோவாக கணக்கிட்டு அதற்கேற்ப கூடுதல் நெல்லை கட்டாயப்படுத்தி வாங்குவதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
அவர்கள் கூறியதாவது:40 கிலோ எடை கொண்டது ஒரு மூடையாக கணக்கிடப்படுகிறது. சாக்கின் எடை 200 கிராம். 40.200 கிலோ என்ற அடிப்படையில் தான் மூடை எடையை கணக்கிட வேண்டும். ஆனால் ஒரு மூடைக்கு 42 கிலோ வரை நிரப்பினால் மட்டுமே அளவிட சம்மதிக்கின்றனர். ஒரு ஏக்கருக்கு 40 கிலோ மூடை விளைந்தால் மூடைக்கு 2 கிலோ வீதம் 80 கிலோ நெல்லுக்கான பணம் எங்களுக்கு கிடைப்பதில்லை.
அரசு நிர்ணயித்த நெல்லின் விலை கிலோ ரூ. 23.60 வீதம் ஏக்கருக்கு ரூ.2000க்கு மேல் நஷ்டம் ஏற்படுகிறது. சிந்தாமல் சிதறாமல் அறுவடை செய்த பணம் கிடைக்கும் என்று நம்பித் தான் நெல் கொள் முதல் மையத்திற்கு வருகிறோம். இங்கும் எங்களை ஏமாற்றுகின்றனர். சரியான அளவீட்டை பறக்கும் படையினர் அவ்வப்போது ஆய்வு செய்ய கலெக்டர் சங்கீதா நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.