sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 30, 2025 ,ஐப்பசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

அப்பாடா... ரூ.8 கோடி வட்டியும் கிடைத்தது மாநகராட்சி ஆசிரியர்களுக்கு 35 ஆண்டுக்கு பின் நிம்மதி

/

அப்பாடா... ரூ.8 கோடி வட்டியும் கிடைத்தது மாநகராட்சி ஆசிரியர்களுக்கு 35 ஆண்டுக்கு பின் நிம்மதி

அப்பாடா... ரூ.8 கோடி வட்டியும் கிடைத்தது மாநகராட்சி ஆசிரியர்களுக்கு 35 ஆண்டுக்கு பின் நிம்மதி

அப்பாடா... ரூ.8 கோடி வட்டியும் கிடைத்தது மாநகராட்சி ஆசிரியர்களுக்கு 35 ஆண்டுக்கு பின் நிம்மதி


ADDED : அக் 30, 2025 04:12 AM

Google News

ADDED : அக் 30, 2025 04:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மதுரை மாநகராட்சி ஆசிரியர்கள், அலுவலர்களுக்கு நிலுவையில் இருந்த ரூ.8.12 கோடி வருங்கால வைப்புத் தொகைக்கான (பி.எப்.,) வட்டியும் கிடைத்ததால் 35 ஆண்டுகளுக்கு பின் பி.எப்., பலன்கள் முழுவதுமாக கிடைத்துள்ளது அவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாநகராட்சி ஆசிரியர்கள், அலுவலர்களுக்கு 1.4.1990 முதல் 31.3.2019 வரை வழங்க வேண்டிய பி.எப்., தொகை வட்டியுடன் ரூ. 20 கோடி 5 லட்சத்து 52 ஆயிரத்து 815 என கணக்கிடப்பட்டது. இத்தொகையை விதிப்படி 2019 மார்ச்சுக்குள் மாநில கணக்காயர் அலுவலகம் பரிந்துரை செய்த வங்கிக் கணக்கில் மதுரை மாநகராட்சி செலுத்தி, ஆசிரியர், அலுவலர்கள் கணக்கில் வரவு வைத்திருக்க வேண்டும்.

ஆனால், ஆசிரியர் சங்கங்கள் சார்பில் நடத்திய பல்வேறு போராட்டங்களால் தாமதமாக 2023ல் மூன்று கட்டங்களாக செலுத்தியது. இதனால் தாமதமாக செலுத்திய தொகைக்கு (30.9.2025 வரை) வட்டியாக ரூ.8 கோடியே 12 லட்சத்து 115 சம்பந்தப்பட்ட ஆசிரியர், அலுவலர்களுக்கு வழங்க வேண்டும் என உள்ளாட்சி தணிக்கை துறை மாநகராட்சி நிர்வாகத்திற்கு தணிக்கை சான்று அளித்தது.

இதையடுத்து வட்டித் தொகையும் ஆசிரியர், அலுவலர்கள் வங்கிக் கணக்கில் மாநகராட்சி செலுத்த வேண்டும் என ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தப்பட்டன.

தினமலர் நாளிதழிலும் இதுதொடர்பாக தொடர்ந்து செய்திகள் வெளியிடப்பட்டன. இதன் எதிரொலியாக வட்டித் தொகையும் மாநில கணக்காயர் அலுவலகம் பரிந்துரைத்த வங்கிக் கணக்கிற்கு மாநகராட்சி விடுவித்துள்ளது.

தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் சீனிவாசன் கூறியதாவது: மாநகராட்சி விடுவித்துள்ள தொகை விரைவில் ஆசிரியர், அலுவலர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். தொடர் போராட்டங்களால் 35 ஆண்டுகளுக்கு பின் பி.எப்., தொகையை சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் முழுமையாக பெற்று பலனடையும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இதற்கு நடவடிக்கை எடுத்த மாநகராட்சி அதிகாரிகள், தொடர்ந்து செய்தி வெளி யிட்ட தினமலர் நாளிதழுக்கு நன்றி என்றனர்.






      Dinamalar
      Follow us