ADDED : ஜன 04, 2026 05:33 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உசிலம்பட்டி: உசிலம்பட்டி அருகே முதலைக்குளத்தைச் சேர்ந்தவர் விஜய் 28. இவரது தோட்டத்தில் பயிரிட்ட நெல்லை மயில்கள் சேதப்படுத்தின. இதற்காக தோட்டத்தில் கடலை பருப்பில் விஷம் கலந்து வைத்துள்ளார்.
அதை சாப்பிட்ட இரண்டு மயில்கள் இறந்தன. தகவலறிந்த உசிலம்பட்டி வனச்சரக அலுவலர் அன்னக்கொடி, வனவர் வீமராஜா, வனக்காப்பாளர் கருப்பசாமி உள்ளிட்டோர் விசாரித்தனர். மயில்களை கொன்றவிஜய் கைது செய்யப்பட்டார்.

