ADDED : ஏப் 15, 2025 06:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பேரையூர்: சாப்டூர் அருகே ரோட்டோரத்தில் நின்ற வேன் மீது ஆட்டோ மோதியதில் கணவர் பலியானார். மனைவி, மகள் உள்ளிட்ட மூவர் காயமடைந்தனர்.
சாப்டூரைச் சேர்ந்தவர் தமிழரசன் 59. இவரது மனைவி வளர்மதி 42. மகள் சுபஸ்ரீ 26. பேத்தி இலன்இன்பா 3. இவர்கள் டி.கல்லுப்பட்டி உறவினரின் திருமணத்திற்கு நேற்று காலை சென்றனர். பிறகு மதியம் சாப்டூர் செல்ல ஆட்டோவில் டி.கல்லுப்பட்டி -- பேரையூர் ரோட்டில் தம்பிபட்டி அருகே சென்று கொண்டிருந்தபோது ரோடு ஓரத்தில் நின்ற வேன் மீது ஆட்டோ மோதியது. இதில் தமிழரசன் இறந்தார். வளர்மதி, சுபஸ்ரீ, இலன்இன்பா காயமடைந்து மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். டி. கல்லுப்பட்டியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் அய்யனார் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரிக்கின்றனர்.