ADDED : அக் 21, 2026 08:28 PM

அ நிறம் | அளவு
உசிலம்பட்டி: மதுரை மாவட்டம் நல்லுத்தேவன்பட்டி மின்துறை பணியாளர் ராஜா 50.
டூவீலரில் ஆண்டிபட்டி நோக்கிச் சென்றார். தேனி மாவட்டம் ஆண்டிபட்டி முத்தனம்பட்டியைச் சேர்ந்தவர் ஜவுளிக்கடை நடத்தும் மலைச்சாமி 28, நண்பர் ஏ.சி., மெக்கானிக் கிருஷ்ணகுமாருடன் 29, டூவீலரில் உசிலம்பட்டியில் இருந்து ஊர் திரும்பினர். இன்று மாலை வாடி கருப்பு கோயில் அருகே ஒரே திசையில் சென்ற இரண்டு டூவீலர்களும் எதிர்பாராத விதமாக மோதிக் கொண்டன. டூவீலரின் பின்னால் அமர்ந்திருந்த கிருஷ்ணகுமார் கீழே விழுந்து இறந்தார். மற்ற இருவரும் காயமடைந்தனர். கிருஷ்ணகுமாரின் மனைவிக்கு கடந்த வாரம்தான் வளைகாப்பு விழா நடந்தது. இந்நிலையில் அவர் இறந்தது குடும்பத்தினர் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
