நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உசிலம்பட்டி; உசிலம்பட்டி அருகே டி. சேர்வைபட்டியைச் சேர்ந்தவர்கள் போஸ்ராஜா 36, சின்னன் 36.
கட்டட தொழிலாளிகளான இருவரும் நேற்று உசிலம்பட்டியில் பணியை முடித்து விட்டு இரவு 7:40 மணியளவில் டூவீலரில் ஊருக்குத் திரும்பினர். தொட்டப்பநாயக்கனுார் அருகே சென்றபோது முன்புறம் சென்ற ஆட்டோவில் மோதியதில் போஸ்ராஜா உயிரிழந்தார். காயமடைந்த சின்னன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். உசிலம்பட்டி தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.