
குப்பையை அள்ளுங்க
மதுரை செல்லுார் கட்டபொம்மன் நகர் காமராஜர் 2வது தெருவில் டன் கணக்கில் குப்பை சிதறியுள்ளது. துாய்மைப் பணியாளர்கள் சரிவர குப்பையை அகற்றுவதில்லை. மாநகராட்சி அதிகாரிகள் குப்பையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- ராமமூர்த்தி, பி.பி.குளம்
நிரம்பிய சாக்கடை
மதுரை எஸ்.பி.ஐ., ஆபிசர்ஸ் காலனியில் ரோட்டில் பாதாள சாக்கடை நிரம்பி ஆறாக ஓடுகிறது. துர்நாற்றம் ஏற்படுவதால் அப்பகுதி வழியாக செல்வோர் முகம் சுளிக்கின்றனர். மாநகராட்சி அதிகாரிகள் சாக்கடை அடைப்பை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- உதயகுமார், பைபாஸ் ரோடு.
சாக்கடைக்குள் செல்லுார்
மதுரை செல்லுார் மேலத்தோப்பில் பாதாள சாக்கடை அடைப்பால் இரண்டு மாதமாக அப்பகுதி முழுவதையும் கழிவுநீர் சூழ்ந்துள்ளது. துர்நாற்றத்துடன் காலரா உள்ளிட்ட நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- மாணிக்கம், செல்லுார்
பள்ளத்தை சரி செய்யுங்க
மாநகராட்சி மண்டலம் 2, 35வது வார்டு அண்ணாநகர் 80 அடி ரோட்டில் லோடு மேன் சங்கம் எதிரே பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. சில தினங்களுக்கு முன் அதிகாலையில் நடந்த விபத்தில் 7 பேர் காயமடைந்தனர். உயிர்பலி ஏற்படும் முன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- ரமேஷ், அண்ணாநகர்.
காவு வாங்கும் ரோடுகள்
மாநகராட்சி கூடல்புதுார் பகுதிகளில் 8 மாதங்களுக்கு முன் அவசரகதியில் அமைத்த தார் ரோடுகள் தற்போது போக்குவரத்திற்கு தகுதியற்று உயிரை காவு வாங்கும் நிலையில் உள்ளது. ஆனையூர், ஆலங்குளம் செல்வோர் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. மாநகராட்சி அதிகாரிகள் தரமான தார் ரோடு அமைக்க வேண்டும்.
- பாண்டி, கூடல்புதுார்.
குவிந்த குப்பை
மாநகராட்சி திருநகர் 7 வது ஸ்டாப், காந்திஜி 7 வது குறுக்குத் தெரு ஆவின் பூத் அருகே குப்பை குவிந்துள்ளது. பிளாஸ்டிக் கழிவுகளை கால்நடைகள் உண்கின்றன. புகார் அளித்தும் குப்பை அகற்றப்படவில்லை. மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- ரம்யா, திருநகர்.