
மீண்டும் வேண்டும் சிக்னல்
மதுரை காளவாசலில் இருந்து ஆரப்பாளையம் செல்லும் வழியில் இருந்த போக்குவரத்து சிக்னல் நிறுத்தி வைத்துஉள்ளதால் வாகன ஓட்டிகள் தாறுமாறாக அதிவேகமாக வண்டிகளை இயக்குகின்றனர். இதனால் வாகனவிபத்து அபாயம் உள்ளதை கருதி மீண்டும் சிக்னல் செயல்பாட்டிற்கு கொண்டுவரவேண்டும்.
-- சேதுராமன், முத்துபட்டி
ரோடு அமைக்க வேண்டும்
மதுரை வார்டு எண் 69ல் பொன்மேனி ஜெய்நகரில் டவர் ரோடு முதல் மெயின் ரோடு வழியாகபள்ளி, வேலைக்கு தினமும் நுாற்றுக்கும் மேற்பட்டோர் பயன்படுத்துகின்றனர். ரோடு மிகவும் மோசமாக ஆங்காங்கே பெரிய குழிகளுடன் உள்ளதால் சிரமமாக உள்ளது. துாசி பறக்கிறது. வாகனங்களில் செல்வோருக்கு இடையூறு ஏற்படுத்துகிறது. தானத்தவம் மெயின் 1,2 குறுக்கு வீதிகள் பல ஆண்டுகளாக ரோடு வசதியின்றி வசிக்கிறோம். பல முறை அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்துள்ளோம்.
-- ஸ்ரீனிவாசன், ஜெய்நகர்
பள்ளம், மேடான ரோடு
மதுரை பழைய மாகாளிப்பட்டி ரோடு மேடு, பள்ளங்களாக உள்ளது. பள்ளி, கல்லுாரி பஸ்கள் செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. கீரைத்துறை மின்மயானத்திற்கு பலர் செல்கின்றனர். ரோட்டை சீரமைக்க வேண்டும்.
- - நீலகண்டன், கீழவாசல்
குடிநீர் தேக்கம்
மதுரை வார்டு எண் 78ல் கோவலன் நகர் மெயின் ரோட்டில் டி.வி.எஸ்., நகர் சந்திப்பில் குடிநீர் உடைப்பு ஏற்பட்டு 2 நாட்களாக தெரு முழுவதும் தேங்கி நிற்கிறது. நீர் வீணவதால் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ளது. மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- - தங்கபாண்டிகோவலன்நகர்

