
தேங்கும் கழிவுகள்
மதுரை ஆலங்குளம் பாரதி நகர் பகுதியில் கழிவுகளை ரோட்டில் கொட்டுவதால் சுகாதாரக்கேடு உண்டாகிறது. அவற்றை உடனே அகற்ற மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- ஜெயராமன், ஆலங்குளம்.
மூடப்படாத பள்ளம்
ஒத்தக்கடை வேலம்மாள் நகரில் ஜல்ஜீவன் திட்டத்திற்காக தோண்டிய பள்ளங்கள் பல மாதங்களாக மூடப்படவில்லை. சிறுவர்கள், பெரியவர்கள் ரோட்டைக் கடக்க சிரமப்படுகின்றனர். அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- துரைசாமி, ஒத்தக்கடை.
தெருநாய் தொல்லை
மதுரை எஸ்.எஸ்.காலனி ஜவகர் மெயின் ரோடு, அவென்யூ, ஜவகர் நகர் 2வது தெருக்களில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. தெருவில் மக்கள் அச்சத்துடனே செல்கின்றனர். மாநகராட்சி நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- கிருஷ்ணகுமார், எஸ்.எஸ்.காலனி.
போக்குவரத்து நெரிசல்
தெப்பக்குளம் பாண்டியன் நகர் அருகே டிராபிக் சிக்னல் இல்லாததால் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது. ரோட்டை ஆக்கிரமித்து வாகனங்கள் பார்க் செய்வதால் பலர் விபத்துக்கு உள்ளாகின்றனர். அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- சுவர்ணா, தெப்பக்குளம்.
சுகாதாரக்கேடான கால்வாய்
மதுரை செல்லுார் காமராஜர் தெரு சந்திப்பு பகுதியில் உள்ள பந்தல்குடி மழைநீர் கால்வாயில் குப்பையை கொட்டி அசுத்தப்படுத்துகின்றனர். அப்பகுதியில் வசிக்கும் மக்கள் சுகாதாரக் கேட்டிற்கு உள்ளகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- சங்கரபாண்டியன், செல்லுார்.
சேதமான ரோடு
மதுரை ரேஸ்கோர்ஸ் ரோட்டில் கட்சி நிகழ்ச்சிகளுக்காக கொடிகளை நடுவோர் ரோட்டை சேதப்படுத்தி விடுகின்றனர். அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- சிதம்பரம், தல்லாகுளம்.
ரோடு ஆக்கிரமிப்பு
மதுரை தென்கரை ரோட்டின் இருபுறமும் வாகனங்களை பார்க் செய்து ஆக்கிரமிப்பதால் அடிக்கடி விபத்துக்கள் நடக்கின்றன. சில இடங்களில் கால்நடை கழிவுகளும் கொட்டப்படுகின்றன. மாநகராட்சி நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- நீலகண்டன், கீழவாசல்.
சமூக விரோதிகள் நடமாட்டம்
மதுரை குருவிக்காரன் சாலை பாலத்தின் கீழ் இரவில் சமூகவிரோதிகளின் நடமாட்டம் அதிகம் உள்ளது. பெண்கள் தனியாக செல்வதற்கு அச்சப்படுகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- உதயா, கீழவாசல்.