தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ஆக்கிரமிப்பால் அவதி

ஆக்கிரமிப்பால் அவதி

ஆக்கிரமிப்பால் அவதி


UPDATED : ஜூலை 21, 2026 06:36 PM

ADDED : ஜூலை 21, 2026 06:32 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 21, 2026 06:36 PM ADDED : ஜூலை 21, 2026 06:32 PM


Follow on Google
அ நிறம் | அளவு

அய்யர்பங்களா - மூன்று மாவடி ரோட்டின் இருபுறமும் ஆக்கிரமிப்புகள் அதிகமாக உள்ளன. நடைபாதைகளை ஆக்கிரமித்து வாகனங்களை நிறுத்துவதால், மக்கள் போக்குவரத்து நெரிசலில் தவிக்கின்றனர். மாநகராட்சி அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- செல்வம், அய்யர்பங்களா.

* தெருநாய்கள் தொல்லை மதுரை டோக் நகர், எச்.எம்.எஸ்., காலனி, கோ ஆப்டெக்ஸ் காலனியில் இரவு நேரங்களில் தெருநாய்கள் தொல்லை அதிகம் உள்ளது. தனியாக செல்வோரை துரத்திச் சென்று தாக்குகின்றன. மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- ராமநாதன், டோக் நகர்.

* வேகத்தடை அவதி மதுரை சம்மட்டிபுரம் மெயின் ரோட்டில் அரை கி.மீ., செல்வதற்குள், 7 வேகத்தடைகள் உள்ளன. இதனால் அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

- சண்முககுமரன், சம்மட்டிபுரம்.

* மார்க்கெட் செயல்படுமா மேலுார் நகராட்சி அலுவலகம் பின்புறம் உள்ள தினசரி மார்க்கெட் முழுமையாக செயல்பட நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- மணவாளன், மேலுார்.

* போக்குவரத்து நெரிசல் கருப்பாயூரணியில் சக்கிமங்கலம் பிரிவில் காலை, மாலை வேளைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. போக்குவரத்து போலீசார் இருந்தும்கூட நெரிசலை தவிர்க்க முடியவில்லை. ரோட்டோர வாகனம், கடைகளின் ஆக்கிரமிப்புகளே காரணம். போலீசார் நடவடிக்கையில் தீவிரம் காட்ட வேண்டும்.

-ராசாத்தி, மதுரை

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us