/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
திறக்காத வளாகத்தால் 'திறந்தவெளி' பாதிப்பு
/
திறக்காத வளாகத்தால் 'திறந்தவெளி' பாதிப்பு
ADDED : ஆக 16, 2025 12:49 AM

அலங்காநல்லுார்; அலங்காநல்லுார் ஒன்றியம் ஊர்சேரியில் ஆதிதிராவிடர் மயான ரோட்டில் 3 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட சமுதாய சுகாதார வளாகத்திற்கு தண்ணீர் வசதியின்றி பயன்பாட்டிற்கு வராமல் உள்ளது. இதனால் மயானம் செல்லும் ரோட்டின் இருபுறத்தையும் திறந்தவெளி கழிப்பிடமாக பயன்படுத்தி வருகின்றனர்.
இப்பகுதி ஒற்றையடி பாதையாக மாறி உள்ளது. மயானத்தில் கடந்தாண்டு ரூ.பல லட்சம் மதிப்பில் பேவர் பிளாக் அமைத்துள்ளனர். தண்ணீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரவில்லை. மயான ரோட்டில் நுழைவுப் பகுதியை குப்பை கொட்டும் இடமாக பயன்படுத்தி வருவதால் கழிவுகள் சிதறி கிடக்கின்றன. சுகாதார வளாகத்திற்கு தண்ணீர் வசதி செய்து தரவும், ரோட்டில் குப்பை கொட்டுவதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.