நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரையில் தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க கட்டடத்தின் நுாற்றாண்டு விழா நிறைவில் சங்க கட்டட வளாகத்தின் மூன்றாவது தளத்தில் புனரமைக்கப்பட்ட அலுவலக திறப்பு விழா நடந்தது.
தலைவர் ஜெகதீசன் தலைமை வகித்தார். வேலம்மாள் கல்விக் குழுமத் தலைவர் முத்துராமலிங்கம் குத்து விளக்கேற்றி திறந்து வைத்தார். சங்க செயலாளர் ஸ்ரீதர், துணைத்தலைவர் செல்வம், பொருளாளர் சுந்தரலிங்கம், இணைச்செயலாளர் கணேசன், முன்னாள் தலைவர் நீதிமோகன் கலந்து கொண்டனர்.