நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை அரசு மருத்துவமனை இதயநோய் மருத்துவத்துறை சார்பில் 117 வது வார்டில் கூடுதல் தீவிர சிகிச்சை பிரிவு துவக்கப்பட்டது. ஜெய்க்கா கட்டட அறுவை சிகிச்சை அரங்கு வளாகத்தில் ஏற்கனவே 60 படுக்கைகளுடன் தீவிர சிகிச்சை பிரிவு வார்டு செயல்படுகிறது.
நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் பழைய இதயநோய் வார்டில் ரூ.10 லட்சம் மதிப்பில் 22 படுக்கைகளுடன் மற்றொரு தீவிர சிகிச்சை பிரிவு அமைக்கப்பட்டது. மருத்துவமனை கண்காணிப்பாளர் குமரவேல் திறந்து வைத்தார். ஆர்.எம்.ஓ., சரவணன், துறைத்தலைவர் செல்வராணி, இணைப்பேராசிரியர் சரவணன் கலந்து கொண்டனர்.

