ADDED : டிச 25, 2025 06:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சோழவந்தான்: சோழவந்தான் அருகே மேலக்காலில் அங்கன்வாடியைச் சுற்றிலும் குப்பை,கால்நடை கழிவுகள், கட்டுமான பொருட்கள் நிறைந்து அசுத்தம் நிலவியது.
இதிலிருந்து உருவாகும் கொசுக்களால் குழந்தைகளுக்கு நோய் தொற்று ஏற்பட்டது. இது குறித்து தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானதால் அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து சுத்தம் செய்தனர்.

