UPDATED : நவ 07, 2026 04:27 PM
ADDED : நவ 07, 2026 04:24 PM
அ நிறம் | அளவு
மதுரை: நபார்டு வங்கி நிதியுதவியின் மதுரை விஷால் மாலில் பெண் தொழில் முனைவோரின் தயாரிப்பு பொருட்களை விற்பனை செய்யும் இயல் கடை திறப்புவிழா நடந்தது.
சென்னை நபார்டு வங்கி மண்டல அலுவலக பொது மேலாளர் கணேசன் திறந்து வைத்தார். மாவட்ட மேம்பாட்டு மேலாளர் சக்திபாலன், முன்னோடி வங்கி மாவட்ட முதன்மை மேலாளர் பிரசாந்த் டி. நாயக், வாப்ஸ் நிறுவன செயலாளர் அருள், கிரீன் பெம் இயக்குநர் இளதி, திருநங்கையர் வள மைய இயக்குநர் பிரியா பாபு கலந்து கொண்டனர்.
