/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
அலங்காநல்லுாரில் பஸ் ஸ்டாண்ட் திறப்பு
/
அலங்காநல்லுாரில் பஸ் ஸ்டாண்ட் திறப்பு
ADDED : ஜன 13, 2025 05:20 AM
அலங்காநல்லுார் : அலங்காநல்லுாரில் மூலதன மானிய திட்டத்தில் ரூ.1.49 கோடி கட்டப்பட்ட டாக்டர் அம்பேத்கர் பஸ் ஸ்டாண்டை அமைச்சர் நேரு திறந்து வைத்தார்.
அமைச்சர் மூர்த்தி தலைமை வகித்தார். பேரூராட்சிகள் கமிஷனர் கிரண்குரலா, கலெக்டர் சங்கீதா, எம்.எல்.ஏ., வெங்கடேசன் முன்னிலை வகித்தனர். பேரூராட்சி தலைவர் ரேணுகா ஈஸ்வரி வரவேற்றார். கண்காணிப்பு பொறியாளர் முருகேசன், உதவி இயக்குனர் மணிகண்டன், செயல் அலுவலர் (பொறுப்பு) ஜெயலட்சுமி, தி.மு.க.,ஒன்றிய, பேரூர் செயலாளர்கள் தன்ராஜ், ரகுபதி வாடிப்பட்டி, சோழவந்தான் பேரூராட்சி தலைவர்கள் பால்பாண்டியன், ஜெயராமன், அவைத்தலைவர் பாலசுப்பிரமணியன், பொதுக்குழு உறுப்பினர் முத்தையன் பங்கேற்றனர்.
அமைச்சர் நேரு பேசுகையில், ''மாவட்டத்தின் 9 பேரூராட்சிகளில் 3 ஆண்டுகளில் வளர்ச்சி திட்டத்திற்காக ரூ.119 கோடியே 11 லட்சத்தில் பணிகள் நடந்துள்ளது. அலங்காநல்லுார் பேரூராட்சியில் மட்டும் ரூ.20 கோடியே 50 லட்சத்தில் பணிகள் நடந்துள்ளன. சாலைகள், வடிகால்கள், பாலம், தெருவிளக்கு பூங்கா, குடிநீர் உள்ளிட்ட பணிகள் முக்கியமானவை'' என்றார்.