ADDED : செப் 23, 2026 06:02 PM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரை மத்திய சிறை மற்றும் கிளைச் சிறைகளில் ஆண் செவிலி உதவியாளர், துாய்மைப் பணியாளர்கள் என 14 பணியிடங்களில் இனச்சுழற்சி அடிப்படையில் நேரடியாக நியமிக்கப்பட உள்ளனர். இதற்கு தகுதியுள்ளவர்களிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
1.7.2026 ல் குறைந்தபட்ச வயது 18 ஆகவும், அதிகபட்ச வயது பெதுப் பிரிவினருக்கு 32, பி.சி.,எம்.பி.சி.,க்கு 34, எஸ்.சி., எஸ்.டி., எஸ்.சி.ஏ.,வினருக்கு 37 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முன்னாள் ராணுவத்தினருக்கு வயது வரம்பு இல்லை. தகுதியுள்ளவர்கள் தேவையான சான்று நகல்களுடன் விண்ணப்பத்தை, ‘சிறைக் கண்காணிப்பாளர், மத்திய சிறை, மதுரை–625016’ என்ற முகவரியில் அக்.6 ம் தேதிக்குள் வழங்க வேண்டும் என சிறை நிர்வாகம் அறிவித்துள்ளது.
