/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மேம்பால பணிகளை அடுத்தாண்டு நவம்பருக்குள் முடிக்க உத்தரவு
/
மேம்பால பணிகளை அடுத்தாண்டு நவம்பருக்குள் முடிக்க உத்தரவு
மேம்பால பணிகளை அடுத்தாண்டு நவம்பருக்குள் முடிக்க உத்தரவு
மேம்பால பணிகளை அடுத்தாண்டு நவம்பருக்குள் முடிக்க உத்தரவு
ADDED : டிச 17, 2024 04:13 AM
மதுரை: மதுரை மேலமடை, கோரிப்பாளையம் சந்திப்புகளில் கட்டப்பட்டு வரும் மேம்பாலங்கள் குறித்து அதிகாரிகளுடன் ஆய்வு செய்த அமைச்சர் எ.வ.வேலு, பணிகளை அடுத்தாண்டு நவம்பருக்குள் முடிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
மதுரையின் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண மேலமடையில் ரூ.156 கோடியிலும், கோரிப்பாளையத்தில் ரூ.190 கோடியிலும் மேம்பாலங்கள் கட்டப்பட்டு வருகின்றன. இப்பணிகளில் அவ்வப்போது சுணக்கம் ஏற்பட்டது. இதுகுறித்துஅரசுச் செயலர், தலைமைப்பொறியாளர்கள் ஆய்வு நடத்தினர். இந்நிலையில் நேற்று அமைச்சர் எ.வ.வேலுவும் பாலங்களை பார்வையிட்டார்.
அவருடன் அமைச்சர் மூர்த்தி, எம்.எல்.ஏ.,க்கள் தளபதி, பூமிநாதன், கலெக்டர் சங்கீதா, நெடுஞ்சாலைத்துறை முதன்மை பொறியாளர் சத்தியபிரகாஷ், கண்காணிப்பு பொறியாளர் ரமேஷ், கோட்டப் பொறியாளர் மோகனகாந்தி, உதவிக் கோட்ட பொறியாளர்கள் ஆனந்த், சுகுமார் சென்றனர்.
அவர்களிடம் அமைச்சர் எ.வ.வேலு பாலப்பணிகளில் உள்ள பிரச்னைகள் குறித்து கேட்டறிந்தார். ரோட்டோரம் உள்ள கால்வாயில் மழைநீர், கழிவுநீரால் பணிகள் சுணக்கமடைகிறது. அந்த நீரை வெளியேற்றுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டால் பணிகளை தொடர முடியும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதேபோல கோரிப்பாளையம் பாலத்தில் பில்லர் அமைப்பது, நில எடுப்பு பிரச்னை, சர்வீஸ் ரோடு அமைக்க வேண்டியிருப்பது குறித்து அமைச்சரிடம் விளக்கினர். பிரச்னைகளை களைந்து, பாலப்பணிகளை 2025 நவம்பருக்குள் முடிக்க வேண்டும் என அமைச்சர் உத்தரவிட்டார்.

