/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரை மாசி, ஆவணி வீதிகளில் கட்டண அடிப்படையில் 'பார்க்கிங்' : கோயில், அரசு காலி இடங்களை வருவாய் தருபவையாக மாற்றலாம்
/
மதுரை மாசி, ஆவணி வீதிகளில் கட்டண அடிப்படையில் 'பார்க்கிங்' : கோயில், அரசு காலி இடங்களை வருவாய் தருபவையாக மாற்றலாம்
மதுரை மாசி, ஆவணி வீதிகளில் கட்டண அடிப்படையில் 'பார்க்கிங்' : கோயில், அரசு காலி இடங்களை வருவாய் தருபவையாக மாற்றலாம்
மதுரை மாசி, ஆவணி வீதிகளில் கட்டண அடிப்படையில் 'பார்க்கிங்' : கோயில், அரசு காலி இடங்களை வருவாய் தருபவையாக மாற்றலாம்
ADDED : அக் 01, 2024 05:15 AM

மதுரை: மதுரை மாசி, ஆவணி மூல வீதிகளில் நெரிசலை கட்டுப்படுத்த கட்டண 'பார்க்கிங்' திட்டத்தை அமல்படுத்த மீண்டும் மாநகராட்சி பரிசீலித்து வருகிறது. இதற்கு பதில் மீனாட்சி அம்மன் கோயிலைச் சுற்றியுள்ள அரசு, கோயில் காலி இடங்களை 'பார்க்கிங்' இடமாக மாற்றி வருவாய் ஈட்டுவது குறித்து பரிசீலிக்கலாம்.
மீனாட்சி அம்மன் கோயிலுக்கு தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வருகின்றனர். பக்தர்களின் வாகனங்கள் அருகில் உள்ள மல்டி லெவல் 'பார்க்கிங்'கில் நிறுத்தப்படுகின்றன. இரண்டடுக்கு உடைய இந்த பார்க்கிங்கில் முதல் தளத்தில் 110 வாகனங்களும், மேல் தளத்தில் 110 வாகனங்களும் மட்டுமே நிறுத்தப்படும். திருவிழா, முக்கிய பண்டிகை நாட்களில் 'ஹவுஸ்புல்' ஆகி ஆவணி, மாசி வீதிகளில் 'பார்க்கிங்' செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.
இந்த வீதிகளில் உள்ள கடை உரிமையாளர்கள், ஊழியர்கள் தங்கள் வாகனங்களை காலை முதல் இரவு வரை நிறுத்துவதால் வாடிக்கையாளர்கள், பக்தர்களின் வாகனங்களை 'பார்க்கிங்' செய்ய முடியவில்லை. இதனால் ரோட்டை மறித்து நிறுத்தும்போது போலீசார் அபராதம் விதிக்கின்றனர். தொடர் கதையாக நடந்து வரும் இப்பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கவும், கடைக்காரர்களின் பார்க்கிங்கை கட்டுப்படுத்தவும் மாசி, ஆவணி மூல வீதிகளில் கட்டணம் வசூலிக்க மாநகராட்சி முடிவு செய்தது. இதற்கு வர்த்தகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து அத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது.
இந்நிலையில் மீண்டும் அத்திட்டத்தை அமல்படுத்த மாநகராட்சி, போலீசார் இணைந்து முயற்சி எடுத்துள்ளனர். இதுதொடர்பாக ஆலோசனைக்கூட்டம் விரைவில் நடக்க உள்ளது. நேற்று போலீஸ் துணைகமிஷனர் கருண்காரட் மல்டிலெவல் பார்க்கிங்கை ஆய்வு செய்தார். அதேசமயம் வாகன பெருக்கத்திற்கேற்ப 'பார்க்கிங்' இடங்களை அதிகரிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. முன்பு ஜான்சி ராணி பூங்காவில் 'பார்க்கிங்' வசதி இருந்தது. தற்போது இல்லாததால் வெளியூர் பக்தர்கள் தங்கள் வாகனங்களை எல்லீஸ்நகர், தெப்பக்குளத்தில் உள்ள மீனாட்சி கோயில் 'பார்க்கிங்'கில் நிறுத்தி ஆட்டோவில் கோயிலுக்கு வருகின்றனர்.
போலீசார் கூறியதாவது: மாசி, ஆவணி மூலவீதிகளில் கட்டண 'பார்க்கிங்' திட்டத்தை வர்த்தகர்கள் ஏற்பார்களா என்பது பேச்சுவார்த்தையில்தான் தெரியும். அதேசமயம் கூடுதல் 'பார்க்கிங்' இடங்களை ஏற்படுத்தலாம். மாசி வீதிகளைச் சுற்றி கோயில், அரசு காலி இடங்கள் உள்ளன. உதாரணமாக எல்லீஸ்நகர் ரோட்டில் பி.எஸ்.என்.எல்., அலுவலகம் அருகில் மீனாட்சி கோயில் இடம் கருவேலமரங்கள் சூழ்ந்துள்ளது. அந்த இடத்தை 'பார்க்கிங்'ஆக மாற்றினால் கோயில் நிர்வாகத்திற்கு வருவாய் கிடைக்கும். இதுபோல் நகருக்குள் உள்ள காலி இடங்களை வருவாய் இடமாக மாற்றும்பட்சத்தில் வருவாயும் கிடைக்கும், 'பார்க்கிங்' பிரச்னையும் தீரும் என்றனர்.