UPDATED : நவ 18, 2026 06:03 PM
ADDED : நவ 18, 2026 06:00 PM
அ நிறம் | அளவு
திருப்பரங்குன்றம்:
ஹார்விபட்டி கிளை நுாலகத்தில் 59வது தேசிய நுாலக வார விழாவை முன்னிட்டு நுாலக வாசகர் வட்டம் மற்றும் வளர்ச்சி குழு சார்பில் மாணவர்களுக்கு ஓவியம், பேச்சு, திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி நவ.,28ல் நடக்கிறது.
திருக்குறள் ஒப்புவித்தல் மற்றும் 'வாசிப்பும் வாழ்க்கையும்' என்ற தலைப்பிலான ஓவியப்போட்டி, 'வாசிப்பை சுவாசிப்போம்' என்ற தலைப்பிலான பேச்சுப் போட்டியில் 6 முதல் 10 வகுப்பு வரை மாணவர்கள், 'கற்றனைத் துாறும் அறிவு' என்ற தலைப்பிலான பேச்சுப்போட்டியில் 11, 12ம் வகுப்பு மாணவர்கள் பங்கேற்கலாம். மேலும் விபரங்களை 9944114227ல் அறியலாம் என வாசகர் வட்ட நிர்வாகி மோகன்தாஸ் தெரிவித்தார்.
