/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ஊராட்சி முறைகேடு கோர்ட் உத்தரவு: உயர்நீதிமன்றம் உத்தரவு
/
ஊராட்சி முறைகேடு கோர்ட் உத்தரவு: உயர்நீதிமன்றம் உத்தரவு
ஊராட்சி முறைகேடு கோர்ட் உத்தரவு: உயர்நீதிமன்றம் உத்தரவு
ஊராட்சி முறைகேடு கோர்ட் உத்தரவு: உயர்நீதிமன்றம் உத்தரவு
ADDED : செப் 07, 2025 10:53 AM
மதுரை: ராமநாதபுரம் மாவட்டம் கமுதக்குடி முருகன். இவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு: கமுதக்குடி ஊராட்சி தலைவராக கவிதா இருந்தார். அவரது கணவர் மோகன் சட்டவிரோதமாக தலைவரின் அதிகாரத்தை பயன்படுத்தி முறைகேடுகளில் ஈடுபட்டார். கலெக்டரிடம் 2023ல் புகார் அளித்தேன். விசாரித்து இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஏ.டி.மரியா கிளீட் அமர்வு விசாரித்தது. மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் பிரித்விராஜ் ஆஜரானார்.
நீதிபதிகள் உத்தரவு: குற்றச்சாட்டுகளின் தன்மையை ஆராய்ந்து, ஊராட்சி ஆவணங்களை சரிபார்த்து கலெக்டர் விசாரணை நடத்த வேண்டும். சட்டவிரோதம், நிதி இழப்பு முறைகேடு கண்டறியப்பட்டால், சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். வழக்கு பைசல் செய்யப்படுகிறது என்றனர்.