/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ரூ.ஒரு கோடி பெற ஆர்வமில்லாத ஊராட்சிகள் சமூகநல்லிணக்க விருது காத்திருக்கு
/
ரூ.ஒரு கோடி பெற ஆர்வமில்லாத ஊராட்சிகள் சமூகநல்லிணக்க விருது காத்திருக்கு
ரூ.ஒரு கோடி பெற ஆர்வமில்லாத ஊராட்சிகள் சமூகநல்லிணக்க விருது காத்திருக்கு
ரூ.ஒரு கோடி பெற ஆர்வமில்லாத ஊராட்சிகள் சமூகநல்லிணக்க விருது காத்திருக்கு
ADDED : ஜூலை 19, 2025 02:59 AM
மதுரை: ரூ.ஒரு கோடி மதிப்பிலான சமூகநல்லிணக்க ஊராட்சி விருதுக்கு ஊராட்சிகள் விண்ணப்பிக்க நாளை (ஜூலை 20) கடைசி நாளாகும். தமிழக அரசு சாதிப் பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தை கடைபிடிக்கும், சமூக ஒற்றுமையை வளர்க்கும் கிராமங்களை கண்டறிந்து ரூ.10 லட்சம் வழங்கி வந்தது.
மாநில அளவில் 10 கிராமங்களை தேர்வு செய்து பரிசு அறிவித்தது. இந்தாண்டு இப்பரிசு தொகை ஒரு கிராமத்திற்கு ரூ. ஒரு கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
இவ்விருது பெறும் ஊராட்சியில் வழிபாட்டு தலம், நீர்நிலைகள், பள்ளிகளில் சாதிப்பாகுபாடு இல்லாமல் இருக்க வேண்டும். பொது மயானம் இருக்க வேண்டும். சமூகத்தினரிடையே நல்லிணக்கம் இருக்க வேண்டும்.
அரசு பள்ளிகளிலும் சமூக நல்லிணக்கத்துடன் மாணவர்கள் படிக்க வேண்டும். கடந்த மூன்று ஆண்டுகளில் வன்கொடுமை சட்டத்தின் கீழ் குற்றச் செயல்கள் நடந்திருக்கக் கூடாது. அரசு சாராத குழுக்களின் செயல்பாடுகளில் ஆதிதிராவிட சமூகத்தினரும் பங்கேற்க வேண்டும். ஊராட்சி தலைவர், துணைத் தலைவர், மக்கள் பிரதிநிதிகளில் ஆதிதிராவிடர் இடம்பெற்றிருக்க வேண்டும். ஆதிதிராவிடர் சமுதாயத்திற்கான திட்டங்களை சரியாக செயல்படுத்தி இருக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு அளவீடுகள் உள்ளன. இவற்றில் பெரும்பாலானவற்றை பெற்றிருக்கும் ஊராட்சிகளை மாநில அளவில் தேர்வு செய்து பரிசு வழங்குவர். இவ்விருது பெற கடந்த ஜூன் 30 கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டது. கடந்தாண்டைப் போல இந்தாண்டு விண்ணப்பங்கள் அதிகம் வரவில்லை. எனவே கால அவகாசத்தை நீட்டிப்பு செய்து ஜூலை 20 வரை விண்ணப்பிக்க வாய்ப்பளித்தனர். அதன்பின்னும் விண்ணப்பங்கள் குறைவாகவே வந்துள்ளன.