/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பணியாளர் பற்றாக்குறை தள்ளாடும் ஊராட்சிகள்
/
பணியாளர் பற்றாக்குறை தள்ளாடும் ஊராட்சிகள்
ADDED : டிச 14, 2024 06:39 AM
பேரையூர் : ஊராட்சிகளில் பணியாளர்கள் பற்றாக்குறையால் சுகாதாரப் பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளன.
பேரையூர் தாலுகாவில் டி.கல்லுப்பட்டி, சேடப்பட்டி ஒன்றியங்கள் உள்ளன. இவற்றில் 73 ஊராட்சிகள் உள்ளன. பல ஊராட்சிகளில் சுகாதாரப் பணியாளர்கள் பற்றாக்குறை அதிகமாக உள்ளது. பணிபுரியும் சிலரும் வயதானவர்களாக உள்ளனர். இவர்களுக்கு வழங்கப்படும் சம்பளமும் குறைவு என்பதால் பணியார்வம் இன்றி உள்ளனர்.
பல ஆண்டுகளாக துாய்மை பணியாளர்கள் நியமனம் செய்யப்படாததால் ஊராட்சி பகுதியில் அகற்றாத சாக்கடை கழிவுகள் அதிகரித்து துப்புரவு பணியில் தொய்வு ஏற்பட்டு உள்ளது. சுகாதார பாதிப்பால் சில ஊராட்சிகளில் தினக்கூலி அடிப்படையில் துாய்மை பணியாளர்களாக நியமனம் செய்து துப்புரவு பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
ஊராட்சி செயலர்கள் கூறுகையில், ''2013 க்குப் பின் துாய்மைப் பணியாளர்கள், மேல்நிலை நீர் தொட்டி இயக்குவோர் நியமிக்கப்படவில்லை. கடை நிலை ஊழியர்களும் இல்லாமல் பணிகள் மிகவும் பாதித்துள்ளன. பணியாளர்களை நியமிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.