/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
குரூப் - 4 வினாத்தாள் சென்ற பஸ்சில் 'காகித சீல்' சர்ச்சை
/
குரூப் - 4 வினாத்தாள் சென்ற பஸ்சில் 'காகித சீல்' சர்ச்சை
குரூப் - 4 வினாத்தாள் சென்ற பஸ்சில் 'காகித சீல்' சர்ச்சை
குரூப் - 4 வினாத்தாள் சென்ற பஸ்சில் 'காகித சீல்' சர்ச்சை
ADDED : ஜூலை 12, 2025 01:47 AM

மதுரை:மதுரை மாவட்ட மையங்களுக்கு டி.என்.பி.எஸ்.சி., குரூப் - 4 தேர்வு வினாத்தாள்களை பாதுகாப்பின்றி பஸ்சில் அனுப்பியதாக சர்ச்சை எழுந்துள்ளது.
தமிழகத்தில் டி.என்.பி.எஸ்.சி., குரூப் --- 4 தேர்வு இன்று நடக்கிறது. மதுரை மாவட்டத்திற்கான வினாத்தாள்கள் சில நாட்களுக்கு முன் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தது. அதை மாவட்ட கருவூல அலுவலக ஸ்ட்ராங் ரூமில் வைத்திருந்தனர். நேற்று முன்தினம் மாலை அவை சார்நிலை கருவூலங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன.
இதற்காக சொகுசு பஸ்சை அமர்த்தி, வினாத்தாள் கட்டுகளை ஏற்றினர். வழக்கமாக பூட்டு போட்டு, அதில் துணியால் சுற்றி மெழுகு சீல் வைத்து அனுப்புவர். இம்முறை பஸ்சின் பின்புறம், பக்கவாட்டில் உள்ள கதவுகளை ஏ4 தாளால் ஒட்டி சீல் வைத்தனர். இதனால் வினாத்தாள்களை பாதுகாப்பின்றி அனுப்புவதாக சர்ச்சை உருவானது.
தேர்வு அதிகாரிகளிடம் கேட்டபோது, 'மதுரை மாவட்டத்தில் அருகில் உள்ள சார்நிலை கருவூலங்களுக்கு பஸ்சில் டி.என்.பி.எஸ்.சி., அலுவலர்கள், துப்பாக்கி போலீசாருடன் பாதுகாப்பாக அனுப்பப் பட்டுள்ளது. அதனால் பாதிப்பு எதுவும் இல்லை. சீல் வைக்க வேண்டும் என்பதற்காக கதவுகளில் தாள் ஒட்டி சீல் வைத்தனர்' என்றனர்.