ADDED : செப் 29, 2024 06:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருமங்கலம்,: மதுரை மாட்டுத்தாவணியில் இருந்து சிவகாசி மற்றும் திருநெல்வேலிக்கு இரண்டு அரசு பஸ்கள் சென்றன. கப்பலுார் டோல்கேட்டை கடக்க முயன்ற போது பஸ்களின் பாஸ்ட் டேக் கணக்கில் பணம் இல்லாததால் பஸ்கள் கடந்து செல்ல ஊழியர்கள் அனுமதிக்கவில்லை.
இதையடுத்து பஸ் டெப்போவிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு பாஸ்ட் டேக் கணக்கில் பணம் ரீசார்ஜ் செய்த பின்பு அனுமதிக்கப்பட்டன. இதனால் 40 நிமிடங்களுக்கு மேல் பயணிகள் தவித்தனர்.