தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ஒட்டியவர்களுக்கு அபராதம்

ஒட்டியவர்களுக்கு அபராதம்

ஒட்டியவர்களுக்கு அபராதம்


ADDED : நவ 20, 2026 10:27 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 20, 2026 10:27 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: மதுரையின் துாய்மை, அழகை பேணும் வகையில் மாநகராட்சி பகுதிகளில் சுவர்கள், கட்டடங்கள், பொது இடங்களில் போஸ்டர்கள் ஒட்ட தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, இன்று (நவ.,20) 5 மண்டலங்களிலும் சுகாதார ஆய்வாளர்கள் மூலம் போஸ்டர்கள் அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது. தெற்குமாசி வீதி, திருநகர், ஹார்விப்பட்டி, அவனியாபுரம், பசுமலை, ஜி.எஸ்.டி., ரோடு, திருப்பரங்குன்றம் கிரிவலப் பாதை உள்ளிட்ட 219 இடங்களில் போஸ்டர்கள் அகற்றப்பட்டன. தடையை மீறி ஒட்டியவர்களுக்கு தலா ரூ.5000 அபராதம் விதிக்கப்பட்டது.

அதிகாரிகள் கூறுகையில், ‘‘தடையை மீறி போஸ்டர் ஒட்டுபவர்கள், அச்சகங்கள், தொடர்புடையோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us