தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/சபரிமலை சிறப்பு ரயில்கள்

சபரிமலை சிறப்பு ரயில்கள்

சபரிமலை சிறப்பு ரயில்கள்


UPDATED : நவ 20, 2026 09:53 PM

ADDED : நவ 20, 2026 09:52 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 20, 2026 09:53 PM ADDED : நவ 20, 2026 09:52 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: மகாராஷ்டிரா மாநிலம் நாந்தெட், தெலுங்கானா மாநிலம் சர்லப்பள்ளி ஆகிய இடங்களில் இருந்து மதுரை வழியாக கேரள மாநிலம் கொல்லத்திற்கு சபரிமலை சிறப்பு ரயில்களை தென்மத்திய ரயில்வே அறிவித்துள்ளது.

* டிச. 7 முதல் ஜன. 11 வரை திங்கள் தோறும் மதியம் 1:00 மணிக்கு நாந்தெட்டில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் (07687), புதன் அதிகாலை 6:00 மணிக்கு கொல்லம் செல்கிறது. மறுமார்க்கத்தில் டிச. 9 முதல் ஜன. 13 வரை புதன் தோறும் காலை 9:30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (07688), மறுநாள் இரவு 11:00 மணிக்கு நாந்தெட் செல்கிறது.

* ஜன. 18 (திங்கள்) மாலை 5:40 மணிக்கு சர்லபள்ளியில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் (07691), புதன் காலை 6:00 மணிக்கு கொல்லம் செல்கிறது. மறுமார்க்கத்தில் ஜன. 20 காலை 9:30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (07692), மறுநாள் மாலை 4:30 மணிக்கு சர்லபள்ளி செல்கிறது.

மேற்கண்ட ரயில்கள் கொட்டாரக்கரா, புனலுார், செங்கோட்டை, தென்காசி, கடையநல்லுார், சங்கரன்கோவில், ராஜபாளையம், ஸ்ரீவில்லிப்புத்துார், சிவகாசி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, ஸ்ரீரங்கம், அரியலுார், விருத்தாச்சலம், விழுப்புரம், திருவண்ணாமலை, காட்பாடி, குண்டகல், மந்திராலயம் ரோடு, செகந்திராபாத் வழியாக செல்கின்றன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us