/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ஓய்வூதியர் பேரமைப்பு நிர்வாகிகள் தேர்வு
/
ஓய்வூதியர் பேரமைப்பு நிர்வாகிகள் தேர்வு
ADDED : ஆக 20, 2025 01:45 AM
மதுரை; மத்திய, மாநில அரசு பொதுத்துறை ஓய்வூதியர் பேரமைப்பின் மதுரை கிளை அமைப்பதற்கான கூட்டம் ஒருங்கிணைப்பாளர் எஸ்.சம்பத் தலைமையில் நடந்தது.
இதில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கம், அஞ்சல் ஓய்வூதியர் நலச்சங்கம், அருசு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்ற பணியாளர்கள் சம்மேளனம், ஓய்வுபெற்ற கல்லுாரி ஆசிரியர் கழகம் உட்பட 8 ஓய்வூதியர் அமைப்புகள் பங்கேற்றன.
இதில் பேரமைப்பின் தலைவராக கோதண்டராமன், பொதுச் செயலாளராக ஆறுமுகம், பொருளாளராக ராமமூர்த்தி தேர்ந்தெடுக்கப்பட்டனர். துணைத் தலைவர்களாக அம்மையப்பன், சுந்தரராஜன், இணைச் செயலாளர்களாக சேர்முகப்பாண்டியன், ஜீவானந்தம், அமைப்புச் செயலாளர்களாக பெரியதம்பி, திப்புசுல்தான், செயற்குழு உறுப்பினர்களாக நெடுஞ்செழியன், ஆனந்தன், ராமகிருஷ்ணன், சுந்தரசாமி, ரவீந்திரன், அர்ஜூனன் தேர்வு செய்யப்பட்டனர். ஓய்வு அரசுஊழியர் சங்க செயலாளர் மகாலிங்கம் நன்றி கூறினார்.