ADDED : ஜன 23, 2026 06:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரையில் தமிழ்நாடு ஓய்வு பெற்ற கல்லுாரி ஆசிரியர் கழக கிளை சார்பில் செயற்குழுக் கூட்டம் தலைவர் ராமமூர்த்தி தலைமையில் நடந்தது. செயலாளர் பெரியதம்பி செயல் அறிக்கை வாசித்தார்.
முடக்கப்படும் ஓய்வூதிய திட்ட காலத்தை' (கம்ப்யூட்டேஷன்) 15 ஆண்டுகள் என்பதை 12 ஆண்டுகளாக குறைக்க வேண்டும். ஓய்வூதிய திருத்தம் வழங்கப்பட வேண்டும். உயர் துவக்க ஊதியத்தை மற்றொரு சாராருக்கு வழங்க வேண்டும்.
உயர்துவக்க ஊதியம் பெறாத கல்லுாரி ஆசிரியர்களுக்கு வழங்கவேண்டும். 8வது ஊதியக்குழுவில் சலுகைகள் அனைத்தையும் ஓய்வூதியர்களுக்கும் தொடர்ந்து வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். இணைச் செயலாளர் ஆனந்தன் நன்றி கூறினார்.

