/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பாண்டியராஜபுரத்தில் வேண்டிய வசதி இல்லையாம் கழிவுநீரால் கதறும் மக்கள்

ADDED : ஆக 18, 2025 02:59 AM

மதுரை : உள்ளாட்சித் தேர்தலில் பெத்தானியபுரம் வார்டு மூன்றாக பிரிக்கப்பட்டது. அன்று முதல் 64 வது வார்டு பாண்டியராஜபுர பகுதியில் குடிநீர் கிடைக்காமலும், அடிப்படை வசதிகளுக்கு பிற வார்டுகளை சார்ந்தும் உள்ளதாக மக்கள் மனம் வெதும்புகின்றனர்.
இங்குள்ள சர்வீஸ் ரோட்டில் மாநகராட்சி கழிப்பறை 3 ஆண்டுகளுக்கும் மேலாக பூட்டிக்கிடக்கிறது. இதனால் பொது இடத்தில் இயற்கை உபாதையை கழிக்கின்றனர். கழிவு நீரேற்று நிலையத்தில் ஜெனரேட்டர் இல்லாததால் மின்தடை நேரத்தில் சாக்கடை தேங்கி துர்நாற்றம் வீசுகிறது.
தண்ணீரேற்றும் அரசரடியில் பிரஷர் பிரச்னை இருப்பதால், குடிநீர் வினியோகம் துவங்கிய முதல் ஒரு மணி நேரத்திற்கு கழிவு நீராகவே வருகிறது. அதை பயன்படுத்த முடிவதில்லை. சர்வீஸ் ரோடு பூங்காவில் உபகரணங்கள் பழுதடைந்துள்ளதால் குழந்தைகள் விளையாட முடியவில்லை.